Ads (728x90)

பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, தேசியக் கொடியை துப்பட்டாவாக அணிந்து அவமரியாதை செய்ததாக, சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில், தமிழன் என்ற படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமான இவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான ஜெர்மனி சென்றபோது, அவரை சந்தித்த பிரியங்கா, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார். அதோடு கவர்ச்சியான உடையணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதற்கு, கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடியை துப்பட்டவாக அணிந்து, புகைப்படம் எடுத்திருந்தார். அதை, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். பிரியங்காவின் இந்த செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சுதந்திர தினத்தன்று, நம் பாரம்பரிய உடையைக் கூட, பிரியங்கா அணியவில்லை; குறைந்தபட்சம் தேசியக்கொடியை அணிந்து, அதற்கு அவமரியாதை செய்யாமல் இருந்திருக்கலாமே என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோபக்கார ரசிகர்கள் சிலர், நீங்கள் இந்தியாவுக்கு வர வேண்டாம் என, ஆவேசத்துடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget