மோகன்லால் நடிப்பில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் முதலில் ஆரம்பித்த படம் 'வில்லன்'. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் விஷால், ஹன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் கடந்த ஜூலை மாதமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தாமதமானதால் இந்த ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக-31ஆம் தேதி வெளியாக இருப்பது லால்ஜோஸ் டைரக்சனில் முதன்முறையாக மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் தான். சொல்லப்போனால் 'வில்லன்' படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் தான் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தின் படப்பிடிப்பே ஆரம்பமானது.. லால்ஜோஸ் எப்போதுமே குறுகிய காலத்தில் பணிகளை முடிப்பதில் வல்லவர் என்பதால் அவர் முந்திக்கொண்டார் என்றே தெரிகிறது. அதேசமயம், வில்லன் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால் தான் ரிலீஸ் தேதி தாமதமாகி வருகிறதாம்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment