Ads (728x90)

சினிமா கம்பெனி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் ஸ்ருதி ஹரிகரன். அதன் பிறகு கன்னட படங்களில் நிறைய நடித்தார். தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெறாததால் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. மீண்டும் கன்னட படங்களுக்கு திரும்பினார். தற்போது 4 கன்னட படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

அதோடு சோலோ என்ற மலையாளப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த நிபுணன் படத்தில் அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படுகிறது. ஒரு தமிழ் பெண்ணாக இது தனக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாக ஸ்ருதி ஹரிகரன் கூறுகிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அர்ஜுன் உடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு நிபுணன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டதில் எனக்கு பெருமை.

இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான மனைவியாக, அவருக்கு நேரிடும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும் உடல்நலம் சார்ந்த திடீர் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவும் இருந்தது. அதனை திறம்பட செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு ஆக்ஷ்ன் படத்தின் நடுவே இழையோடும் குடும்ப கதை தமிழ் பெண்ணான எனக்கு இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்திருப்பதை பெருமையாக இருக்கிறது. தொடர்ந்த நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். என்கிறார் ஸ்ருதி ஹரிகரன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget