Ads (728x90)

கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சரி சமமான வரவேற்பை பெற்றது. வசூலிலும் செமத்தியாக கல்லா கட்டியது. இத்தனைக்கும் இந்தப்படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் 86 பெறும் புதுமுகங்கள் தான் என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

அங்கமாலி என்கிற நகரத்தின் விதவிதமான மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை, குறிப்பாக அங்கே கொடிகட்டி பறக்கும் பன்றி இறைச்சி வியாபாரத்தை, அந்த வியாபாரத்தின் போட்டி காரணமாக உண்டாகும் மோதலை அப்படியே எந்தவித கமர்ஷியல் பூச்சுமின்றி ராவாக படமாக்கியிருந்தார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி.

தற்போது இந்தப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலையாளத்தைப் போல தெலுங்கிலும் சுமார் 80 புதுமுகங்களை இந்தப்படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்ய இருக்கிறார்கள். கதாநாயகன் கேரக்டரில் விஷ்வக் சென் என்பவர் நடிக்கிறார்.

ஐதராபாத்தில் விரவிக்கிடக்கும் கேங்ஸ்டர் கலாச்சாரத்தையும் இந்தப்படம் பிரதிபலிப்பதால் தெலுங்கில் ரீமேக் செய்தால் இந்தப்படம் ஈஸியாக ரசிகர்களின் மனதில் ரீச்சாகும் என்கிறார்கள். கதாநாயகிகள் யார், படத்தை இயக்குவது யார் என்பதெல்லாம் விரைவில் அறிவிக்கப்படுமாம்..

Post a Comment

Recent News

Recent Posts Widget