அமைச்சுப் பதவி சுமையாக இருப்பதாகவும், எந்த நேரமும் அலைபேசிக்கு அழைப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் புதிதாக அமைச்சுப் பதவியேற்ற திருமதி அனந்தி சசிதரன் சக மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே, தனது மனப்பாரங்களை சக உறுப்பினர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமைச்சுப் பதவி ஏற்றதிலிருந்து தொடர்ச்சியாக அலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாக உதவிகள் கோருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுப் பதவி கடும் சுமையாக இருப்பதாகவும் அவர் கருத்துப் பகிர்ந்துள்ளார். அதற்கு சக உறுப்பினர்கள், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் இருவரை பதவி நீக்க வேண்டும் என்று, முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் பதவி விலகியிருந்தனர்.
அந்த வெற்றிடத்துக்கு திருமதி அனந்தி சசிதரன் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டி ருந்தனர். இவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று ஒரு மாதமே கடந்துள்ளது.

Post a Comment