எதிர் வரும் காலங்களில் வட்டார முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளது. உங்கள் அபிவிருத்தியில் முன்னின்று செயற் படக்கூடிய துடிப்பானவர்களைத் தெரிவு செய்யவேண்டிய தேவை உங்ளுக்கு உள்ளது.
எனவே ஒவ்வொரு இளைஞர்களும் அரசியல் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வடமராட்சி குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தலைவர் ஜே.ஜெயச் சந்திரன் தலைமையில், வடமராட்சி பிறீமியர் லீக் கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்ட நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந் தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்றைய நாள் பொன்னான நாளாகும். பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.இளைஞர்களாகிய நீங்கள் எதிர்கால அபிவிருத்தி கருதி அரசியலில் பங்கு கொள்ள முன்வர வேண்டும்.
இன்றைய நாள் பொன்னான நாளாகும். பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.இளைஞர்களாகிய நீங்கள் எதிர்கால அபிவிருத்தி கருதி அரசியலில் பங்கு கொள்ள முன்வர வேண்டும்.
இன்று எமது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பல்வேறு பட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவுப் பேரணிகளில் கலந்து கொண்டு உரிமைக்குரல் கொடுத்து வருகின்றீர்கள்.
அந்த வகையில் இளைஞர்களின் அரசியல் பிரவேசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுமென சட்டம் கொண்டுவரப்பட்டது போல ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 25 வீதம் இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அவ்வாறு சட்டம் வரும்போது இளைஞர்கள் அரசியலில் பங்கேற்று எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவேண்டும் – என்றார்.

Post a Comment