யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு பின்புறம், ஆத்திச்சூடி விநாயகர் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையிலேயே இவ்விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடப்பதற்கு எதிரெதிர் திசையில் கார் ஒன்றும் முச்சக்ரவண்டியொன்றும் முயற்சித்துள்ளது.
அச்சமயம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற விசேட அதிசொகுசு புகையிரதம் கடவையை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி வண்டியை பின்னால் இயக்கியுள்ளார்.
இதையடுத்து காரிலிருந்த பெண் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து சடுதியாக வெளியேறினார்.
இதனால் கார் புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதுடன், காரை செலுத்திய மருத்துவரான குறித்த பெண் தப்பித்துள்ளார்.

Post a Comment