Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் மற்ற போட்டியாளர்களை போல நடித்து காட்ட வேண்டும். அதன்படி ரைசாவை போல ஓவியா நடித்து காட்டினார்.
அப்போது ரைசாவின் காதலர் பெயரையும் குறிப்பிட்டார். மேலும் எனக்கு செல்போன் வேண்டும் எனது பாய் பிரண்ட் வெளியே காத்திருப்பார் என்றும் சொல்லி இருந்தார். தனது காதலர் குறித்த தகவல் வெளியானதால் ரைசா அதிர்ச்சி அடைந்தார். இதனால் கதறி கதறி அழுதார்.
இந்த நிலையில், ரைசாவின் காதலர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அவரது பெயர் தருண். இவர் ஒரு போட்டோ கிராபர். ரைசா விளம்பர படங்களில் நடித்தபோது போட்டோ கிராபராக பணியாற்றியபோது அறிமுகமானார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலிக்க தொடங்கினர். தற்போது இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அவரே 3வது எபிசோட்டில் கூறி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget