நேற்று காலி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக பலவான்களாக இருக்கின்ற நாடுகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை மேற்படி பலமிக்க நாடுகளின் விளையாட்டுக் களமாக மாற்றிவிடுவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
அதன் முன்னோடிச் செயற்பாடாகத் தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு கையளித்திருந்தது. தற்போது மத்தள விமான நிலையத்தினையும் தற்போது இந்தியாவிற்கு கையளிக்க முற்படுகின்றார்கள். இதனால் எதிர்கால சந்ததியினர் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை நாம் முன்கூட்டியே எச்சரிக்கின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க மொத்தம் 1670 அமெரிக்க டொலர்கள் செலவானது. அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலேயே செலுத்திவிட்டனர்.
தற்போது 1170 அமெரிக்க டொலர்களை மாத்திரமே செலுத்த வேண்டியுள்ளது. அதனை 20 வருடத்தில் செலுத்தி முடித்துவிட முடியும். அதற்காக வருடாந்தம் 95 அமெரிக்க டொலர்களை மாத்திரம் செலுத்தினால் போதுமானதாகும்.
ஒரு வருடத்திற்கு இந்த தொகையினை செலுத்த முடியாத அளவிற்கு அரசாங் கம் மட்டமாகியுள்ளது என்பதே இதன் வெளிப்பாடாகும். அரசாங்கம் இவ்வா றான நிலையில் இருந்தாலும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையை வருமானம் ஈட்டும் நிறுவனம் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
Post a Comment