Ads (728x90)

வடக்கு மாகாண சபை­யின் நேற்றைய அமர்­வில், அமைச்­ச­ருக்­கு­ரிய ஆச­னத்­தில் – முத­ல­மைச்­ச­ருக்கு அரு­கில் ப.சத்­தி­ய­லிங்­கத்­துக்கு ஆச­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர் இப்­போ­தும் அமைச்­சுப் பத­வி­யில் தொடர்­கின்­றாரா? என்ற சந்­தே­கத்தை இது பலருக்கு ஏற்படுத்தியது.

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைச் சர்ச்சை தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யே­யான சந்­திப்பு இந்த மாதம் 5ஆம் திகதி நடை­பெற்­றி­ருந்­தது. தமது கட்­சியை பழி­வாங்­கும் நோக்­கு­டன் முத­ல­மைச்­சர் செயற்­ப­டு­கின்­றார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து, அமைச்­சுப் பத­வி­களை தமிழ் அர­சுக் கட்சி ஏற்­ப­தில்லை என்ற முடிவை அந்­தக் கட்­சி­யி­னர் எடுத்­த­னர்.

இதற்கு அமை­வாக சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பதவி வில­கல் கடி­தத்தை முத­ல­மைச்­ச­ருக்கு அனுப்­பி­யி­ருந்­தார். முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், சத்­தி­ய­லிங்­கத்­தி­னது பதவி வில­கலை ஏற்­றுக் கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், ப.சத்­தி­ய­லிங்­கம் அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் அம­ரும் அதே ஆச­னத்­தி­லேயே நேற்­றைய தின­மும் அமர்ந்­தார். அவர் அமைச்­ச­ரா­கப் பத­வி­யைத் தொடர்­கின்­றாரா? என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதே­வேளை, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் புதிய சுகா­தார அமைச்­சரை இன்­ன­மும் நிய­மிக்­கா­மல் இழுத்­த­டிப்­புச் செய்கின்றார் என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget