Ads (728x90)

சீனக் கடற்படையின் மிக நவீன வைத்தியசாலைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய வைத்தியசாலைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget