Ads (728x90)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு சற்று தொலைவில் மசூதியை கட்டலாம்' என ஷியா முஸ்லிம் வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன. 'ஏழு ஆண்டு களாக நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கோரிக்கை வைத்தார். இதையடுத்து 'வரும் 11ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஷியா மத்திய வக்ப் வாரியம், உச்ச நீதிமன்றத்தில் 30 பக்கங்கள் அடங்கிய பதிலை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: பாபர் மசூதி இருந்த இடம் எங்க ளுக்கு சொந்தமானது. அதனால் இது தொடர்பான எந்த பேச்சிலும் நாங்கள் தான் ஈடுபட முடியும். இந்த இடத்துக்கு சன்னி முஸ்லிம் பிரிவினர் உரிமை கோர முடியாது. பிரச்னைக்கு அமைதியான முறையில், நிரந்தர தீர்வு காண்பதற்கு,பேச்சு நடத்த ஒரு குழுவை நியமிக்க உள்ளோம். அதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

மக்கள் புனிதமாக கருதும் கடவுள் ஸ்ரீ ராமர் பிறந்த இடம் தொடர்பான பிரச்னையில், பேச்சு மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ராமர் பிறந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடத்தில் பாபர் மசூதியை கட்டலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இருந்து வரும், ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான பிரச்னை யில் உச்ச நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த உள்ள நிலையில் முஸ்லிம் அமைப்பின் இந்த பதில் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget