சுதந்திர போராட்டத்தின் போது, "வெள்ளையவேன வெளியேறு" இயக்கம் துவக்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
மோடி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள நிகழ்வின் 75வது ஆண்டு தினமான இன்று, அந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை போற்றுவோம். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நாடு ஒன்றுபட்டு, சுதந்திரம் என்ற நோக்கத்தை அடைந்தது.
1942ம் ஆண்டில் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு, இந்தியா சுதந்திரம் பெற அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு பிறகு இன்று, பிரச்னைகள் வேறு விதமாக உள்ளது. 2022 ம் ஆண்டில் ஏழ்மை, மாசுபாடுகள், ஊழல், பயங்கரவாதம், சாதியம், மதவாதம் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது கனவு என உறுதி ஏற்போம்.
நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பெருமை கொள்ளும் வகையில், தோளோடு தோள் நின்று, ஒன்றாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment