Ads (728x90)

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். அவர் வாழ்ந்த வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று(ஆகஸ்ட்18) அறிவித்தார். இதனையடுத்து போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஆனால், போயஸ் தோட்டத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு உரிமையில்லை என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், வீடு எங்களுக்கே சொந்தம் என தீபக்கும் கூறியிருந்தனர்.
வீட்டின் உரிமையாளர்கள் யாரோ அவர்களுக்கு இழப்பீடு அளித்து போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறினார்.

இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர்களை வெளியேற்றிய போலீசார், தோட்ட பணியாளர்களை மட்டும் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர். வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget