Ads (728x90)

நடு ரோட்டில் நமாஸ் செய்வதை தடுக்கமுடியாத போது, போலீஸ் ஸ்டேஷனில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது,'' என, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள் ளது. சமீபத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தும்படி, போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, லக்னோவில் நடந்த ஒருநிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: சமீபத் தில், சிவன் கோவில்களுக்கு செல்லும் கன்வர் யாத்திரை நடந்தது.அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், 'லவுட் ஸ்பீக்கர்'கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படியும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் லவுட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடைவிதிக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டேன்.

குறிப்பிட்ட சில மத வழிபாட்டு தலங்களில், இந்தத் தடையை செயல்படுத்த முடியாத நிலை குறித்து போலீசார் தெரிவித்தனர்.ஒரு குறிப்பிட்ட மதத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அந்த உத்தரவை செயல் படுத்த வேண்டாம் என்று கூறிவிட் டேன். நடு ரோட்டில் முஸ்லிம்கள் நமாஸ் செய்வதை தடுக்க முடியாவிட்டால், போலீஸ் ஸ்டேஷன்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டா டுவதையும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget