Ads (728x90)

 குறி­காட்­டு­வான்-­ந­யி­னா­தீவு இடையே பட­குச் சேவை­க­ளில் ஈடு­ப­டும் தனி­யார் பட­கு­கள் அனைத்­தும் இன்று புதன்­கி­ழமை சேவைப் பு­றக்­க­ணிப்­பில் ஈடு­ப­ட­வுள்­ளன என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பில் நயி­னா­தீவு தனி­யார் படகு உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
குறி­காட்­டு­வா­னி­லி­ருந்து நயி­னா­தீ­வுக்­கான பட­குச் சேவை­யில் ஈடு­ப­டும் அனைத்­துப் பட­கு­க­ளும் உரி­மை­யா­ளர்­க­ளும் இன்று தொடக்­கம் சேவைப் பு­றக்­க­ணிப்­பில் ஈடு­ப­ட­வுள்­ளோம்.
பல வரு­டங்­க­ளாக நாம் பொது­மக்­க­ளுக்­கான பட­குச் சேவை­களை வழங்கி வரு­கி­றோம். திடீ­ரென யாரு­டைய அனு­ம­தி­க­ளை­யும் பெறா­மல் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த சிலர் பட­கு­டன் வந்து பொது­மக்­களை ஏற்­றிச் செல்­கின்­ற­னர். இத­னால் எமது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.
எனவே தென்­னி­லங்­கை­யி­ன­ரின் தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பாட்­டி­னைக் கண்­டித்­தும் அவர்­க­ளுக்­கான பட­குச் சேவையை உட­ன­டி­யாக நிறுத்­து­ மா­றும்­கோரி போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வுள்­ளோம் – என்­றுள்­ளது.
குறி­காட்­டு­வா­னில் இருந்து நயி­னா­தீவு நோக்கி படகு சேவை­யில் ஈடு­பட அண்­மை­யில் எவ­ருக்­கும் எவ்­வித அனு­ம­தி­க­ளை­யும் நாம் வழங்­க­வில்லை. அது தொடர்­பில் ஆராய்­வ­தாக வேல­ணைப் பிர­தேச செய­லக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget