Ads (728x90)

இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 16 பேர் கொண்ட வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது போட்டியில் சுகயீனம் காரணமாக விளையாட முடியாமல் இருந்த இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் இந்திய அணிக்கெதிரான 2 ஆவது போட்டிக்கு தலைமை தாங்குகிறார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, குஷல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக்க, லகிரு குமார, விஷ்வ பொர்னாண்டோ, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, மிலிந்த புஸ்பகுமார, லக்ஷன் சந்தகன், லகிரு திரிமன்னே ஆகியோர் இக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget