Ads (728x90)

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடேட் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.

ரஜினி, அஜித், விஜய் இவர்களின் படங்கள் தான் இப்போதைய தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக். விஜய்யின் மெர்சல் பட மூன்றாவது ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் படம் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 7.5 கோடி வரை விலைபோயுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
 
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதால் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ரஜினியின் கபாலி படம் கூட இந்தளவுக்கு விலைபோகவில்லை என்று கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget