ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்துள்ள 'ஒக்கடு மிகிலாடு' படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படம் இலங்கைப் பிரச்னை, எல்டிடிஇ அமைப்பின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் எல்டிடிஇ அமைப்பின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார். அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி இப்படத்தை இயக்கியுள்ளார்.
“இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தொடாத ஒரு கதையைத் தொட்டிருக்கிறேன். இப்படி ஒரு திரை அனுபவத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இலங்கை, இந்தியா பின்னணியில் இரு வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை. படத்தில் நடித்துள்ள அனைவரும் இயல்பாக நடித்துள்ளது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது.
மஞ்சு மனோஜ் போராட்டத் தலைவராக அவ்வளவு அசத்தலாக நடித்துள்ளார். படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். பராகுவே நகரில் படத்தின் பின்னணி இசை, ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இசை மற்றும் டிரைலரை வெளியிட உள்ளோம்,” என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் வரும் இந்தப் படம் இலங்கைப் பிரச்சனை, போராட்டம் பற்றிய படம் என்பதால் எந்த சர்ச்சையும் இல்லாமல் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment