களவாணி மற்றும் கலகலப்பு போன்ற படங்களில் நடித்த ஓவியா, தற்போது, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிக்கிறார். இதில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில், சிறிய வேடத்தில் நடித்திருப்பவர், ஒரு பாட்டுக்கு, குத்தாட்டமும் ஆடியிருக்கிறார்.
இதையடுத்து, 'மேல்தட்டு நடிகர்களுடன், என்னால், 'டூயட்' பாட முடியவில்லை; அதனால், குத்துப்பாட்டு மூலமாவது, அவர்களுடன், ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறேன்...' என்று, குத்தாட்ட வாய்ப்புகளுக்காக, கல்லெறிந்து வருகிறார். கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!

Post a Comment