புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாகிக்கிச் சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment