சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் ஷாய் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் ஜார்டு டொனால்டுசனை எதிர்த்து விளையாடினார். இதில் ராம்குமார் 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் ரிச்சர்டு காஸ்குட்டை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்செஸ் டியோபோவிடம் தோல்வியடைந்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் ஷாய் ஜோடி, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ், உக்ரைனின் ஓல்கா சவுசுக் ஜோடியை வீழ்த்தியது. சானியா ஜோடி கால் இறுதியில் ருமேனியாவின் இரினா, ரலூகா ஒலரு ஜோடியை எதிர்கொள்கிறது. - ஐஏஎன்எஸ்

Post a Comment