Ads (728x90)

சினிமா சின்னத்திரை இரண்டையும் விட்டு விலகி இருந்தார் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த். அவரை அண்மையில் சந்தித்த எஸ்.வி.சேகர் 13 வருடங்களுக்கு பிறகான அவரது படத்தை வெளியிட்டிருந்தார். ஸ்ரீகாந்த் எளிமையான முறையில் சதாபிஷேகம் விழா கொண்டாடியிருக்கிறார். இது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அவரைப் பற்றிய ஒரு பிளாஷ் பேக்...

அந்தக் காலத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மகன். கிரஹபிரவேசம் படத்தில் ஜெய்சங்கருக்கு நிகராக திரையில் நின்றவர். தனித்துவமான ஸ்டைல், வசன உச்சரிப்பால் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். ஹீரோவாக, வில்லனாக, குணசித்ர நடிகராக பல படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் கடைசியாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். அதன் பிறகு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகினார்.

அப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வளர்ந்து வரும்போது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் நண்பரான கலைஞானம் ரஜினியை ஹீரோவாக வைத்து பைரவி என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்கிறார். ஆனால் ரஜினி வளரும் நடிகர் என்பதால் ஸ்ரீகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கலைஞானம் கருதினார். அப்போது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார்.

அவரை சந்தித்து பேசிய கலைஞானம் "ரஜினின்னு ஒரு புது பையன். ரொம்ப வருஷமாக அவனைத் தெரியும். பாலச்சந்தர் படங்கள்ல தொடர்ச்சியா நடிச்சிட்டிருக்கான். அவனை ஹீரோவா போடடு பைரவின்னு ஒரு படம் பண்றேன். அதுல நீங்க வில்லனா நடிக்கணும்" என்றார்.

ஸ்ரீகாந்துக்கு கடும் கோபம். "ஹீரோவான என்னை வில்லனாக்கிட்டு புது பையனை ஹீரோவாக்குறீங்களா?" என்று கோப்பட்டிருக்கிறார். அதற் பிறகு கலைஞானம் பக்குவமாக பேசி "வளர்ற பையன்.. நீங்கதான் உதவி பண்ணனும்" என்று கூறியிருக்கிறார். மனமிறங்கிய ஸ்ரீகாந்த் சரி நடிக்கிறேன். என்று நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை வாங்கி விநியோகித்த கலைப்புலி எஸ்.தாணு ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார். அதுவரை ஹீரோவா நடித்த ஸ்ரீகாந்த் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget