'பருத்தி வீரன்' படத்தின் 'முத்தழகு' கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமா வரலாற்றில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் அப்படியே பதிந்து போயிருக்கும். அப்படிப்பட்ட 'முத்தழகு' கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி. அதன்பின் அந்த பெயரையும், புகழையும், அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லையா, தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்பது ஒரு சினிமா பட்டிமன்றத்திற்கான சிறந்த தலைப்பு.
கடந்த சில வருடங்களாகவே முஸ்தபா ராஜ் என்பவரைக் காதலித்து வந்த பிரியாமணிக்கு அவருடன் நிச்சயதார்த்தம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதியன்று பிரியாமணியும், முஸ்தபாவும் எளிமையாக பதிவுத் திருமணத்தை நடத்திக் கொள்ள இருக்கிறார்களாம். 24ம் தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதற்கு தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பாலிவுட் நண்பர்களுக்கும் பிரியாமணி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள பிரியாமணிக்கு சமீப காலமாக சிறந்த திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் மலையாளம், தெலுங்கு, தமிழ் டிவி ஷோக்கள் சிலவற்றில் நடுவராக கலந்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment