Ads (728x90)

நடிகை விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப் கடந்த சில தினங்களாக நிற்ககூட முடியாத நிலையில் உடல்நலம் குன்றியுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்கள். ஏற்கனவே திலீப்பின் ஜாமின் மனு மறுக்கப்பட்டு, ஆக-7ஆம் தேதி வரை ரிமாண்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது உயர்நீதிமன்றம். இந்தநிலையில் இன்று(ஆக-8) திலீப்பிற்கு ஜாமின் கிடைக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது..

அதற்கு வலு சேர்க்கும் விதமாக திலீப்பின் முந்தைய வக்கில் ராம்குமாருக்கு பதிலாக, பிரபலமான சீனியர் வக்கிலான ராமன் பிள்ளை இன்று ஆஜரானதால் எப்படியும் திலீப்பிற்கு ஜாமின் வாங்கிவிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் இன்று திலீப்பின் ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.. இதில் மீண்டும் ஜாமினை மறுத்த உயர்நீதிமன்றம், வரும் ஆக-22 வரை திலீப்பின் ரிமாண்டை நீட்டித்து உத்தரவிட்டது.

திலீப் பிரபலமானவர் என்பதால், அவருக்கு ஜாமின் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிட கூடும் என்கிற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்தே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என சொல்லப்படுகிறது. இது திலீப்பின் ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget