இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி வீரச் சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ பனின் நினைவாக நல்லூர் பின் வீதியில் அமைக் கப்பட்டுள்ள தூபியை, யாழ்ப்பாணம் மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும்’’ என்று வடக்கு மாகாண சபையால் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடான போரில் உயிரிழந்த இந்திய இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை 27 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடித்து, அதற்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, வடக்கு மாகாண சபை திடீரென மேற்படி கோரிக்கையை நேற்று முன்வைத்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ‘‘நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தை எல்லைப்படுத்தி, துப்புரவு செய்து யாழ்ப்பாணம் மாநகர சபை அதனைப் பொறுப்பேற்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கான கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே, உள்ளுராட்சி அமைச்சராகவும் உள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவைத் தலைவரால் கோரப்பட்டது.

Post a Comment