அரசினால் உந்துருளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத வரி அகற்றப்பட்டுள்ள போதும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உந்துருளிகளின் விலையில் மாற்றம் ஏற்படாது என லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வரிகுறைப்பின் மூலம், ஜப்பானின் உந்துருளிகள் பாரியளவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அதன் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுகொண்ட உந்துருளிகளுக்கான வரி 90சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment