வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனுக்கு எதிராகப் பொது அமைப்புக்கள் சுமத்தியுள்ள நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன்.
வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலுமே, முதலமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ரவிகரனுக்கு எதிராக அந்த மாவட்டத்திலுள்ள சில அமைப்புக்களால் முதலமைச்சரிடம் மனுக் கொடுக்கப்பட்டிருந்தது. நிதி கையாடல்களில் ஈடுபட்டார் என்று அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு – தன்னிலை விளக்கத்தை வழங்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் ரவிகரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Post a Comment