வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
துன்னாலை இளைஞனின் படுகொலை சம்பவத்தின் அடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு, பொலிஸ் காவலரண் மற்றும் பொலிஸ் வாகனம் என்பன தாக்கப்பட்டன.
அந்தச் சம்பவங்களின் தொடர்புடைய சந்தேகனத்தின்பேரிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment