பாகல்பூர் மாவட்டத்தில் பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணைப் பணிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பீகார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. தடுப்பணை கட்டும் பணி, கடந்த 1977-ம் ஆண்டு ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.தற்போது அணை கட்டும் பணிகள் ரூ.389.1 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. அணையின் திறப்பு விழா நாளை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் அணையின் ஒரு பகுதி உடைந்து வெள்ளம் வெளியேறியது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்பூர் பகுதியில் அதிகப்படியான வெள்ளம் காரணமாக, தடுப்பணை திடீரென நேற்று உடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த திறப்புவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய பீகார் நீர்வளத்துறை அமைச்சர் லல்லன் சிங், அணையின் முழுக்கொள்ளவு நீரும் திறக்கப்பட்டதால்தான் உடைந்தது. அதேநேரம், இந்தச் சம்பவத்தால், புதிதாகக் கட்டப்பட்ட அணையின் பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
Post a Comment