Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கும், உயர் தரப் பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும், வேலைத் திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்கு முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, 13 வருடங்கள் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கல்வியை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.

இதற்கமைய, இந்த வருடம் முதல் சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சியடையாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் தோற்ற முடியும்.
தொழில் உலகுக்கு பொருத்தமான வளங்களை பாடசாலை கட்டமைப்பிலேயே பெற்றுக் கொடுக்க மாணவர்களின் தொழிநுட்ப மற்றும் சமூகத் திறன்களை அபிவிருத்தி செய்து அவர்களைப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget