Ads (728x90)

புதன், செப்டம்பர் 20, 2017, 
புரட்டாசி 4, ஹேவிளம்பி வருடம்

நல்ல நேரம் :-        6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10
எமகண்டம்  :-       காலை மணி 7.30-9.00

இராகு காலம்:-    மதியம் மணி 12.00-1.30

மேஷம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்ட மிடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.

மிதுனம்: மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், அரவணைப்பும் பெறுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்: பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். தொழில் வளர்ச்சியால் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

சிம்மம்: வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பிள்ளைகளின் வழியில் ஆடம்பரச் செலவு ஏற்படும்.

கன்னி: நண்பரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். தொழில் வியாபாரத்தில் வரு மானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

துலாம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

விருச்சிகம்: திட்டமிட்ட செயல் இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வங்கி நிதியு தவியுடன் மூலதனத்தை அதிகப்படுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர்.

தனுசு: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் திணறுவர். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும். தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

மகரம்: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவைப் பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கும்பம்: குடும்ப விஷயத்தைப் பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டியால் லாபம் சுமாராக கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிட லாம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.


மீனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்று வீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடை க்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget