Ads (728x90)

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியதில் 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.ரிக்டர் அளவு கோளில் 7.4 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின்  நினைவு தினத்தை மெக்சிகோ மக்கள் நாடு முழுவதும் அனுசரித்த வந்த நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அலறி அடித்து கொண்டு உயிர் தப்பினர். இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget