Ads (728x90)

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணைந்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சிங்கிள் ஏற்கனவே வெளியானது.

இரண்டாம் சிங்கிள் டிராக்கை அக்டோபர் மாதம் வெளியிட உள்ளனர். படத்தின் டீஸரை நவம்பர் மாதமும், ஆடியோ மற்றும் டிரைலரை டிசம்பர் மாதமும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். 2018 பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 14-ஆம் தேதி தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் திரைக்கு கொண்டு வரவும் முடிவு செய்திருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா.

இந்த அறிவிப்பு வெளியானதுமே ஸ்கெட்ச் படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படம் வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழாவும் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget