அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகும் படம் பேனி கான். இசையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனில், ஐஸ்வர்யா இருவரும் பாடகர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது.ஆனால் கால்ஷீட் பிரச்னையால் மாதவன் நடிக்க முடியாமல் போக இப்போது அந்த வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ராஜ்குமார் ராவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ஐஸ்வர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக கருதுகிறேன். அவருடன் நடிக்கும் ஆவலை எதிர்நோக்கி உள்ளேன். இப்படம் தொடர்பாக இயக்குநரை சந்தித்து பேசினேன். இன்னும் ஐஸ்வர்யாவை சந்திக்கவில்லை. விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்.
Post a Comment