Ads (728x90)


'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளர்கள், சர்ச்சைக்கள்ளான அந்த இரண்டு காட்சிகளை நீக்குவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் படத்தின் வசூலைப் பற்றி எதுவும் வெளியில் சொல்வதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் திரையுலகில் இருந்து படத்தின் வசூல் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

3 நாட்களிலேயே 'மெர்சல்' படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாகப் பலரும் சொல்லி வருகிறார்கள். நேற்று டிவிட்டரில் 'மெர்சல் 100 கோடி' ரூபாய் என்பதும் டிரென்ட் ஆகிவிட்டது. 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 54 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். கேரளா, கர்நாடகாவில் 16 கோடி ரூபாயும், அமெரிக்காவில் மட்டும் 5 கோடி ரூபாயும் மற்ற வெளிநாடுகளில் 28 கோடி ரூபாயும் என 103 கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது என கணக்கைத் தருகிறார்கள்.

நேற்று 4வது நாளிலும் வசூல் நன்றாக இருந்ததாகவும் அதையும் சேர்த்தால் 125 கோடியை 4 நாட்களில் கடந்திருக்கலாம் என்கிறார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்றும் வசூல் நன்றாகவே இருக்கும். எனவே, இன்றுடன் முடிவடையும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயைக் கடக்க வாய்ப்புள்ளதாம். விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே குறைந்த நாட்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமை இந்தப் படத்திற்குக் கிடைப்பது உறுதி.

Post a Comment

Recent News

Recent Posts Widget