Ads (728x90)

சமீபத்தில் மலையாள நடிகரும் கேரள எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார் என்பவர், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டது குறித்து கூறும்போது, அது பிருத்விராஜை சந்தோஷப்படுத்துவதற்காக மம்முட்டி எடுத்த தன்னிச்சையான முடிவு என குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் நடிகர்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை ரம்யா நம்பீசன் உட்பட பலரும், அது சங்கத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு என மறுப்பு தெரிவித்தார்கள். இந்த கருத்துதான் காமெடி நடிகர் கலாபவன் சாஜனுக்கு தற்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.. காரணம் இதுதான்..

மலையாள நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும் சரி, அவர் ஜாமீனில் விடுதலையாகி வீட்டுக்கு வந்தபோதும் சரி அவரை சந்தித்த சினிமா பிரபலங்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் கலாபவன் சாஜன். சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து அவ்வளவாக பிரபலம் ஆகாமல் இருந்த சாஜன் த்ரிஷயம் ஹிட்டை தொடர்ந்து 'மாயமோகினி', 'ரிங் மாஸ்டர்', 'வில்லாளி வீரன்' சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'ராம்லீலா' படம் வரை திலீப்புடன் இணைந்து நடித்து அவரது நெருங்கிய நட்பில் உள்ளார்.

அதேசமயம் இன்னொரு பக்கம் திலீப்பிற்கு எதிரானவர் என்று சொல்லப்படுகிற பிருத்விராஜூடனும் நட்பில் இருக்கிறார் கலாபவன் சாஜன். அந்த நட்பின் அடையாளமாகத் தான் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை சாஜனுக்கு வழங்கி அவரை ஒரு இயக்குனராகவும் மாற்றியுள்ளார் பிருத்விராஜ். இந்தநிலையில் நடிகை விவகாரத்தில் திலீப்புக்கு எதிரானவர் பிருத்விராஜ் என சிலரால் சொல்லப்பட்டு வரும் கருத்து இந்த இரண்டு பேருக்கும் நண்பரான சாஜனை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். சமீபத்தில் கூட நடிகர்சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டது அனைவரும் எடுத்த ஒருமித்த முடிவுதான் என பட்டும் படாமல் கூறியுள்ளார் கலாபவன் சாஜன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget