சொந்தத் தேவை காரணமாக வடக்கு மாகாண சபையில் இடம்பறும் சபை அமர்வுகளில் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என பேரவைச் செயலகத்தின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.வடக்கு மாகாண சபையில் இதுவரை நடைபெற்ற அமர்வுகளின் அடிப்படையில் அந்தப் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அந்தப் புள்ளி விவரத்தின்படி மேலும் தெரியவருவதாவது:
வடக்கு மாகாண சபை தோற்றம் பெற்ற பிறகு இதுவரை 108 சபை அமர்வுகள் நடைபெற்றுள்ளன. சபை அமர்வு என்பது மிக முக்கியமான தொன்றாகும்.
மக்கள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்படும் அவையாக அது உள்ளது.
அந்த சபை அமர்வில் சபை உறுப்பினர்கள் அனைவரும் இருக்க வேண்டும், அப்போதே பிரச்சினைகள் தொடர்பான முடிவுகளைத் தெளிவாகச் சம்பந்தபட்ட நபர்களுடன் கலந்துரையாட முடியும்.
ஆனால் இதுவரை நடைபெற்ற சபை அமர்வுகளில் சபை உறுப்பினர்களின் வரவின் மொத்த வீதம் 60 முதல் -70 வீதமாகவே காணப்படுகின்றது.
சபை அமர்வுகளுக்கு வருகை தராதவர்கள் சொந்த விடயம் காரணமாகவும், வெளிநாட்டுப் பயணம் காரணமாகவும் வருகை தர முடியாது என்று அறிவித்தவர்களாகவே உள்ளனர்.
மூன்று சபை அமர்வுக்குத் தொடர்ந்து வருகை தராதவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காரணத்தினால், இடையிலே சபை அமர்வொன்றுக்கு வருகை தந்து அதனைப் புதுப்பித்துச் செல்பவர்களும் உள்ளனர்.
சபை அமர்வுகளில் அனைத்து உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தெரிவித்து இருந்தாலும் அந்த ஒழுங்கு தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லை. என்று சுட்டிக்காட்டுகின்றது.
Post a Comment