Ads (728x90)

இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நினைவு கூறப்பட்டது.


இதன்போது, மருத்துவப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, தீபமேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி இந்தியப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளார் உட்பட மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget