Ads (728x90)

தனி­யார் நிதி நிறு­வ­னங்­க­ளில் இருந்து முறை­யற்ற விதத்­தில் கடன்­க­ளைப் பெற்­றுக் கொண்­ட­தன் கார­ண­மாக அதிக அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள கிராம மக்­களை அதி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­கான நாட­ளா­விய செயற்­றிட்­டம் விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.
வறு­மையை இல்­லா­தொ­ழிக்­கும் கிராம சக்தி மக்­கள் இயக்­கத்தை மக்­கள் மயப்­ப­டுத்­தும் தேசிய நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்­றது.

அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அரச தலை­வர் இவ்­வாறு தெரி­வித்­தார் என அரச தலை­வர் ஊட­கப் பிரிவு அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதில் உள்­ள­தா­வது:-
இந்­தத் திட்­டத்­துக்­கான ஆலோ­சனை 2018ஆம் ஆண்டு வரவு – செல­வுத் திட்­டப் பிரே­ர­ணை­யில் முன்­வைக்­கப்­ப­டும். செல்­வந்­தர்­களை மேலும் செல்­வந்­தர்­க­ளாக்­கு­வ­தற்கு வளங்­க­ளைப் பெற்­றுக் கொடுக்­கும் கொள்­கை­யில் இருந்து வில­கிப் பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­கள் உடைய மக்­களை அதி­லி­ருந்து மீட்டு அவர்­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்கு தேவை­யான வச­தி­க­ளை­யும், வரப்­பி­ர­சா­தங்­க­ளை­யும் வழங்­கு­தல் அர­சின் பொறுப்­பா­கும்.

அர­சி­யல் ரீதி­யில் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் குறை கூறு­வதை விடுத்து வறு­மை­யில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு கடந்த பல வருட கால­மாக அனைத்து அர­சு­க­ளி­லும் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­றிட்­டங்­களை அனு­ப­வ­மா­கக் கொண்டு கிராம சக்தி மக்­கள் இயக்­கத்தை வலுப்­ப­டுத்­து­வது அனை­வ­ரின் கட­மை­யா­கும்.
இந்­தச் செயற்­றிட்­டத்­தில் அனைத்து மாவட்ட செய­லர்­க­ளும், பிர­தேச செய­லர்­க­ளும் நிர்­வா­கத்தை நெறிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக அன்றி அத­னு­டன் இணைந்த அபி­வி­ருந்­தியை நெறிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கச் செயற்­பட வேண்­டும் என்று அரச தலை­வர் குறிப்­பிட்­டார். – என்­றுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget