Ads (728x90)

இலங்கை கடற்படை இந்திய அரசிடமிருந்து கொள்வனவு செய்துள்ள ஈ.ஜி 60 ரகத்தை சேர்ந்த கடல் பாதுகாப்பு கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடையவுள்ளது.

இதற்கு முன்னரும் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து வருண என்ற கடல் பாதுகாப்பு ரோந்துக் கப்பலை இலங்கைக் கடற்படை கொள்வனவு செய்திருந்தது.

கடந்த 2010ஆம் ஆண்டிலும் இந்தியாவிடம் இருந்து இலங்கைக் கடற்படை சயுர என்ற போர்க்கப்பலை கொள்வனவு செய்திருந்தது. குறுகிய காலத்தில் இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்யும் மூன்றாவது கடல் பாதுகாப்பு கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியக் கடற்படையின் இலகுரக பல நோக்குப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் மூன்று நாள்கள் இலங்கையில் தரித்திருக்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget