Ads (728x90)

கீர்த்தி சுரேஷ் தற்போது பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். தமிழில், நடிகையர் திலகம்,தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயர்களில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி.‘“ சாவித்ரி மேடம் பாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். இந்த வேடத்துக்கு என்னை தேர்வு செய்த போது, என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது.

சிவாஜி சாருக்கு சமமாக நடித்து பெயர் வாங்கிய சாவித்ரி போல நடிப்பது சுலபமான வி‌ஷயம் அல்ல. அவரது மகள் விஜயசாமுண்டீஸ்வரி உள்பட அனைவரும் அளித்த ஆதரவு, ஊக்கம் தான் இதில் நடிக்கும் தைரியத்தை எனக்கு தந்தது.

அவர் நடித்து சாதனை படைத்த படங்களை நேரம் கிடைக்கும் போது போட்டு பார்த்து வருகிறேன். சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறினார் .

Post a Comment

Recent News

Recent Posts Widget