
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், சுந்தர்.சியின் சரித்திர படமான சங்கமித்ராவில் நடிக்கயிருந்தார். ஆனால், திடீரென்று அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து இதுவரை அவர் எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை. சபாஷ்நாயுடு படம் மட்டும் கையில் உள்ளது. ஆனால் அதுவும் முடங்கி கிடக்கிறது.
கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பே இல்லாமல் இருந்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது உடலை முன்பு போன்று பராமரிக்காமல் வெயிட் போட்டு காணப்படுகிறார். சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற ஸ்ருதியின் உடல் சற்று அதிகமாகி இருந்த போட்டோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Post a Comment