
ஐ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் 2.O படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் எமிஜாக்சன். அதோடு, தற்போது ஒரு ஆங்கில படத்தில் நடித்து வரும் அவர், சூப்பர் கேர்ள்ஸ் என்ற ஹாலிவுட் டிவி ஷோவிலும் நடித்து வருகிறார். மேலும், கன்னடத்தில் சிவராஜ்குமார் - சுதீப் நடிக்கும் தி வில்லன் படத்தில் நாயகியாக நடிக்கும் எமிஜாக்சன், குயின் கன்னட ரீமேக்கான பட்டர்பிளை படத்திலும் நடிக்கயிருந்தார்.
அதாவது, குயின் ஹிந்தி படத்தில் கங்கனா ரணாவத் நடித்த ரோலில் கன்னட நடிகை பாருல் யாதவ் நடிக்க, லிசா ஹெய்டன் நடித்த கீ ரோலில் நடிக்க எமி ஜாக்சனிடம் பேசியிருந்தனர். ஆனால், இப்போது சூப்பர் கேர்ள்ஸ் டிவி ஷோவில் அவர் திடீரென்று பிசியாகி விட்டதால், பட்டர் பிளை படத்தில் நடிக்க கால்சீட் இல்லை என்று வெளியேறி இருக்கிறார் எமிஜாக்சன்.
Post a Comment