கடந்த சில வருடங்களாக மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடித்த சில படங்கள் வெளியானாலும் அதில் எல்லாம் அவர் சிறப்பு போலீஸ் அதிகாரியாகவே நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் வில்லன் படத்தில் கூட ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்துள்ளார்.அதற்கு முன்பு ஏகப்பட்ட படங்களில் காக்கி யூனிபார்ம் அணிந்த போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.. தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கூட பார்த்தோமே..
ஆனால் தற்போது பிரியதர்ஷன் படத்தில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் இந்த இரண்டு வேடங்களிலும் அல்லாமல் போலீஸ் பயிற்சியாளராக நடிக்க இருக்கிறார். இது மோகன்லாலின் இத்தனை வருட நடிப்புலக பயணத்தில் அவர் ஏற்கும் புதிய கேரக்டர் என்று கூட சொல்லலாம்.
சமீபத்தில் கூட இயக்குனர் பத்ரன் இயக்கவுள்ள படத்தில் இதுவரை அவர் ஏற்று நடிக்கத யானைப்பாகன் வேடமேற்று நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியானது. இப்படி புதிய வேடங்களில் மோகன்லால் நடிக்க இருப்பது நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான்.
Post a Comment