Ads (728x90)

பிருத்விராஜ் தற்போது நடித்து முடித்துள்ள 'விமானம்' படம் வரும் நவம்-1௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார்.

அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜின் 'விமானம்' படமாக உருவாகி வருகிறது. ஷாஜி கேரக்டரில் தான் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பத்திரிகையாளரான பிரதீப் நாயர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பிருத்விராஜின் ஜோடியாக பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண் கேரக்டரில் கிளாசிக்கல் டான்சரான துர்கா லட்சுமி நடித்துள்ளார்.

 இப்போது இந்தப்படத்தில் டீனேஜ் பெண்ணிற்கு தந்தையாக பிருத்விராஜ் நடித்துள்ளார் என்கிற புதிய தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த வருடம் வெளியான 'ஆனந்தம்' பட ஹீரோயின்களில் ஒருவராக நடித்த அனார்கலி தான் பிருத்விராஜின் மகளாக நடிக்கிறார். இந்தப்படம் பிருத்விராஜின் இரண்டு கட்ட வாழ்க்கையை சொல்கிறதாம். ஒரு டீனேஜ் பெண்ணிற்கு பிருத்விராஜ் தந்தையாக நடிப்பது இதுதான் முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது..

Post a Comment

Recent News

Recent Posts Widget