Ads (728x90)

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக எழுந்த புகாரில் முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக் குழு முதல் குற்றச்சாட்டு பதிவை தாக்கல் செய்துள்ளதாக சிஎன்என், ராய்ட்டர்ஸ் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டுப் பதிவின் விவரம் முழுமையாக தெரியவில்லை என்று சிஎன்என் கூறியுள்ளது.

இது தொடர்பான செய்தியை அளிக்க முல்லரின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் கர் மறுத்துவிட்டார்.

அதிபர் தேர்தலில் ட்ரம்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விருப்பம் எனவும், அதற்காக சில திரைமறைவு செயல்களில் ரஷ்ய உளவு அமைப்பு ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

 ரஷ்ய அரசோடு தொடர்புடைய சில தனிநபர்கள் ஹிலாரி தொடர்பான இ-மெயில்களை விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு அளித்து, அதனை தேர்தல் நேரத்தில் வெளியிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget