Ads (728x90)

அரிசியை இறக்குமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக பன்னாட்டு ரீதியாக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாக்கிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டரிசி 90000 மெட்ரிக் தொன், சம்பா அரிசி 60 ஆயிரம் மெட்ரிக் தொன், வெள்ளைப் பச்சையரிசி 50 மெட்ரிக் தொன் ஆகியவற்றை இறக்குமதி செய்ய கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும். எஞ்சிய ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget