Ads (728x90)

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் வருவிக்கப்பட்டு மேலதிக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அங்கு முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் அந்தப் பகுதியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் ஏற்பாட்டுக்குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் கூறப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget