அமெரிக்காவில் ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வார வியாழக்கிழமை ‘தேங்க்ஸ் கிவ்விங் டே’ (நன்றி தெரிவித்தல் நாள்) கொண்டாடப்படுவது வழக்கம். அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமையே, அமெரிக்காவின் ‘ஆடித் தள்ளுபடி’ நாளாகும். அன்றைய ‘தேங்க்ஸ் கிவ்விங் டே’ விற்பனையில் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே கடையை திறந்து விடுவார்கள். மக்கள் கடை வாசலில் விடியவிடிய காத்திருந்து, கடை திறந்ததும் முண்டியடித்து பொருட்களை வாங்குவார்கள். அன்றைய விற்பனையில் லாபத்தை குறிக்க கறுப்பு நிறத்தையும், நஷ்டத்தை குறிக்க சிவப்பு நிறத்தையும் வர்த்தகர்கள் பயன்படுத்துவார்கள்.
எனவே ‘கறுப்பு தின வெள்ளிக்கிழமை விற்பனை’ என்ற பெயரும் உண்டு. இந்தாண்டு சுமார் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Post a Comment